உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி மாணவர் பலி

Published On 2023-11-01 08:59 GMT   |   Update On 2023-11-01 08:59 GMT
  • இன்று காலை வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார்.
  • காய்கறி லோடு ஏற்றி வந்த மினி சரக்கு லாரி இவர் மீது மோதியது.

ராம்ஜிநகர்

திருச்சி மாவட்டம் மணி கண்டம் அருகே நாகமங்க லம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிப்பவர் சங்கர். இவரது மகன் சிவா. இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

இன்று காலை வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு ெசன்றார். திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருச்சியில் இருந்து நாகமங்கலம் பகு திக்கு காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறி லோடு ஏற்றி வந்த மினி சரக்கு லாரி இவர் மீது மோதியது.

இதில் சரக்கு லாரியில் சிக்கிய ேமாட்டார் சைக்கிள் சுமார் 50மீட்டர் தூரம் இழுத்து சென்று, சாலை யோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் சிவா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இச் சம்பவம் அறிந்து மணிகண்டம் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறை உதவியுடன் மினி சரக்கு லாரியில் சிக்கி இருந்த சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மதுரையில் இருந்து திருச்சி, திருச்சியில் இருந்து மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அம்பேத்கர் நகர் அருகே உள்ள கட் ரோட்டில் திரும்பி செல்கிறது. இதனால் அதிகளவு இங்கு விபத்து ஏற்படுகிறது. விபத்தை தவிர்க்க போக்குவரத்தை கண்காணிக்க 24 மணி நேரமும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.

Tags:    

Similar News