உள்ளூர் செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

Published On 2023-06-28 13:47 IST   |   Update On 2023-06-28 13:47:00 IST
  • 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது
  • தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும் என்று ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

திருச்சி, 

பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-அரசு பள்ளிகளில் கணினி, ஓவியம், உடற்கல்வி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் உள்ளிட்ட பாடங்களை 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் நடத்துகின்றர். அவர்களுக்கு மே மாதம் சம்பளத்தை மனிதாபிமானத்துடன் வழங்க வேண்டும்.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் கடந்த இரண்டு ஆண்டாக இவர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக அவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியை முதல்-அமைச்சர் மனிதநேயத்தோடு வழங்க வேண்டும்.13-வது கல்வியாண்டில் பணிபுரியும் போதும் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். எனவே தி.மு.க.வின் 181-வது தேர்தல் வாக்குறுதியை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News