ராகிங் செய்தது நிரூபணமானால் 7 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்- ஐகோர்ட்டில் கல்லூரி நிர்வாகம் தகவல்
- ஐகோர்ட்டில் சி.எம்.சி. தகவல்
- 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
வேலூர்:
வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 40-க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராக்கி செய்த வீடியோ வெளியானது.
இது தொடர்பாக இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் 7 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.
கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் ராக்கிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிஎம்சி தரப்பில் வக்கீல் ஆஜராகி கல்லூரியில் ராக்கிங் குறித்து புகார் வந்ததும் கல்லூரி முதல்வர் விடுதி வார்டன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் ராக்கிங்கில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக போலீசும் வழக்கு பதிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபண மானால் சட்டப்படி கல்லூ ரியில் இருந்து நீக்கப்படு வார்கள்.
கல்லூரியின் கொள்கை விளக்க குறிப்பிலும் ராக்கிங்கை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்று குறிப்பி டப்பட்டுள்ளது. ராக்கிங் தடுப்பு சட்டங்களை கல்லூரி பின்பற்றி வருகிறது என தெரிவித்தனர்.
இதை கேட்ட நீதிபதிகள் பெயர் பெற்ற கல்வி நிறுவனத்தில் இது போன்ற நடக்காமல் முன்கூட்டியே தடுக்க வேண்டியது யார் பொறுப்பு. கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் முக்கியம்.
ஒழுக்கம் இல்லாமல் மாணவர்கள் தங்கப்பதக்கமே பெற்றாலும் பயன் இல்லை. இது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்சி மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த வழக்கில் போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை 2 நாட்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.