உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

பஸ் டிரைவர் மீது தாக்குதல்

Published On 2022-06-18 16:30 IST   |   Update On 2022-06-18 16:30:00 IST
  • வாலிபர் கைது
  • போலீசார் விசாரணை

வேலூர்:

கே.வி.குப்பம் அடுத்த கொத்தமங்கலத்தில் இருந்து வட விரிஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. பஸ் டிரைவர் கொசவன் புதூரை சேர்ந்த முரளி (வயது 46) என்பவர் ஓட்டி வந்தார்.

விரிஞ்சிபுரம் வேளாண்மை பல்கலைக்கழகம் அடுத்த ஜே.ஜே.நகர் பகுதியில் பஸ் சென்றது. அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் தள்ளிப்போய் பஸ் நின்றது. இதனால் ஜே.ஜே. நகரைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் சக்திவேல்( 19) டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ரத்த காயம் அடைந்த டிரைவர் முரளி குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பாக டிரைவர் முரளி கொடுத்த புகாரின்பேரில் லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News