உள்ளூர் செய்திகள்
- சில்லறை சம்பந்தமாக வாக்குவாதம்
- போலீஸ் விசாரணை
குடியாத்தம்:
ஆம்பூர் அடுத்த பச்ச குப்பம் பகுதியை சேர்ந்தவர் சாந்தலிங்கம் (வயது 48) இவர் ஆம்பூர் பணிமனையில் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 30 -ந் தேதி குடியாத்தத்தில் இருந்து ஆம்பூருக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ்சில் பயணம் செய்த வாலிபருக்கும், கண்டக்டருக்கும் சில்லறை கொடுப்பது சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் சாந்தலிங்கத்தை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சாந்தலிங்கம் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.