உள்ளூர் செய்திகள்

தொரப்பாடியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்த காட்சி. அருகில் மேயர் சுஜாதா, சுகாதார துணை இயக்குனர் பானுமதி.

கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வருகிற 30-ந் தேதி வரை மட்டுமே இலவசம்

Published On 2022-09-11 13:57 IST   |   Update On 2022-09-11 13:57:00 IST
  • 788 இடங்களில் முகாம்கள் நடந்தது
  • கலெக்டர் ஆய்வு

வேலூர்:

தமிழகத்தில் இன்று 36-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 788 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

வேலூர் தொரப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 36-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை ௧௦௦ சதவீதம் போடப்பட்டு உள்ளது. இந்த மெகா முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் செலுத்தப்படுகின்றது. தடுப்பூசி செலுத்தியிருந்தால் 6 மாதம் முடிந்த பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

பூஸ்டர் இலவச தடுப்பூசி வருகிற 30-ந் தேதி வரை மட்டும் போடப்படும். தடுப்பூசி போடுவதற்காக அனைத்து துறைகளிலிருந்தும் 3,940 பணியாளர்கள் பணியில் உள்ளனர் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

இந்த முகாமில் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், துணை இயக்குநர் (சுகாதாரம்) பானுமதி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News