உள்ளூர் செய்திகள்

தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2022-09-06 14:48 IST   |   Update On 2022-09-06 14:48:00 IST
  • ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படும
  • விண்ணப்பிக்க அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசி நாள்

வேலூர்:

வேலூர் மாவட்ட கலெக்டர் ராமமூர்த்தி (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதி உரையும் வழங்கப்படுகிறது.

விருதாளரை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்வு செய்வார்.

இந்த ஆண்டிற்கான விருது வழங்க உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.

தங்களது விண்ணப்பம், சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசி தேதி ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News