உள்ளூர் செய்திகள்
தீயணைப்பு நிலையத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
- துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
- தீயை அணைப்பது குறித்து விளக்கம் அளித்தனர்
குடியாத்தம்:
வேலூர் கோட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி உத்தரவின் பேரில் குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் குடியாத்தம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பஸ் பயணிகள், பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள், ஆட்டோ ஆகியோரிடம் தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
தொடர்ந்து வீடு மற்றும் பணி செய்யும் இடங்கள், வாகனங்களில் தீப்பற்றினால் அதிலிருந்து பாதுகாப்பாக மீள்வது குறித்தும், தீயை அணைப்பது குறித்தும் விரிவான விளக்கம் அளித்தனர்.