உள்ளூர் செய்திகள்

பணத்தை திருடி உண்டியலை ஏரியில் வீசிச்சென்ற கொள்ளையர்கள்

Published On 2023-04-08 15:13 IST   |   Update On 2023-04-08 15:13:00 IST
  • கோவிலில் புகுந்து திருட்டு கும்பல் கைவரிசை
  • போலீசார் விசாரணை

பொன்னை :

பொன்னை அடுத்த கீரைசாத்து கிராமத்தில் ரேணுகாம்பாள் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த வருடம் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடைபெற்றது.

இதன் உண்டியல் காணிக்கை வருகிற ஆடி மாதம் தீமிதி திருவிழாவின் போது எண்ணப்பட இருந்தது. இந்தநிலையில் கோவில் பூசாரி கீரைசாத்து கிராமத்தை சேர்ந்த இருசன் (வயது 75) என்பவர் நேற்று ஒரு மணி கோவிலை பூட்டிவிட்டு மதிய உணவுக்காக வீட்டிற்கு அளவில் சென்றுள்ளார். பின்னர் சுமார் 3 மணி அளவில் கோவில் நடை திறப்பதற்காக வந்துள்ளார்.

அப்போது கோவில் உண்டியலை காணவில்லை. இது குறித்து அவர் உடனடியாக கிராம பொதுமக்களுக்கு தக வல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் பொதுமக்கள் சென்று பார்த்து, பின்னர் பொன்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப் போது கோவில் உண்டியல் கோவிலின் பின்பக்கம் உள்ள ஏரியில் வீசப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர்.

மர்மநபர்கள் உண்டியலைஉடைத்து பணத்தை திருடிக்கொண்டு, உண்டியலை ஏரியில் வீசிச்சென்றது தெரிய வந்தது. கோவில் உண்டியலில் பணம், தங்க நகைகளும் இருந்ததாக பூசாரி இருசன் புகார் அளித்தார். அதன்பேரில்பொன்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News