உள்ளூர் செய்திகள்

ரெயிலில் தூங்கிய சென்னை பயணிகளிடம் உருடிய வாலிபர் கைது

Published On 2022-12-22 10:15 GMT   |   Update On 2022-12-22 10:15 GMT
  • ஜெயிலில் அடைப்பு
  • தங்க செயின், 2 மோதிரங்கள் பறிமுதல்

வேலூர்:

கோவையில் இருந்து சென்னை செல்லும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கடந்த ஜூன் மாதம் ரெயில் பயணிகள் பைகளில் வைத்திருந்த நகைகள் திருடு போனது.

இதுகுறித்து சென்னையை சேர்ந்த ரெயில் பயணிகள் பெரம்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு இது குறித்த தகவல்களை அனுப்பி வைத்தனர்.

ரெயிலில் திருடிய கும்பலை பிடிக்க காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.

நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக அங்கும் அங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

அவரை பிடித்து விசாரித்தனர்.அவர் பெங்களூரை சேர்ந்த வினோத் (வயது 39) என்பது தெரிய வந்தது. அவரிடம் ரெயில் டிக்கெட் இல்லை.அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வினோத் கோவை இன்டர்சிட்டி மற்றும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கி கொண்டிருந்த பயணிகளின் பைகளில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

அவரிடம் இருந்து 3 பவுன் எடை கொண்ட தங்க செயின் மற்றும் 2 மோதிரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News