உள்ளூர் செய்திகள்
நாய் குறுக்கே வந்ததால் கவிழ்ந்த வேன்
- அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் கொணவட்டத்தை சேர்ந்தவர் சாமியுல்லா.
இவர் தனது மனைவி மாமனார் மாமியார் குழந்தைகளுடன் ேவனில் சென்னைக்கு சுற்றுலா சென்று இருந்தார். சுற்றுலா முடிந்து இன்று காலை வேனில் வேலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
வேன் சத்துவாச்சாரியில் வந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. நாய் மீது வேன் மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய வேன் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறபடுத்தினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.