உள்ளூர் செய்திகள்

வேலூர் மாவட்ட அளவிலான கலை, பண்பாட்டுத் திருவிழா நடந்த காட்சி.

வேலூர் மாவட்ட அளவிலான கலை, பண்பாட்டுத் திருவிழா

Published On 2022-11-05 15:22 IST   |   Update On 2022-11-05 15:22:00 IST
  • 30 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

வேலூர் மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான கலை மற்றும் பண்பாட்டுத் திருவிழா காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.

ஒன்றிய அளவில் தேர்ச்சி பெற்ற வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 30 பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார்.

காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வர பிள்ளை அனைவரையும் வரவேற்றார். சைதாப்பேட்டை கேஏகேஎம் நகரவை மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம் மற்றும் தாதிரெட்டிப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி, குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியை ஜெயசீலி கிறிஸ்டி, ஜங்காலப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர், செம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேம் சாய்பாபா, சலவன்பேட்டை அரசு நகரவை உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் அகரம்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சினேகலதா உட்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்றனர்.

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதன்மை அலுவலர் ராஜா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

முடிவில் உதவி தலைமை ஆசிரியர் குமரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News