வேலூர் சிறைக் காவலர் பயிற்சி பள்ளியில் முடிதிருத்துநர், காவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு
- சிறைக் கண்காணிப்பாளர் அறிக்கை
- 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
வேலூர்:
வேலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மத்திய சிறையில் காலி யாக உள்ள ஒரு முடிதிருந்துநர், வேலூர் சிறைக்காவலர் பயிற்சிப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு இரவு காவலர் ஆகிய பணியிடங்க களுக்கு தகுதியுடையோர் தேர்வு செய் யப்பட உள்ளனர்.
இதற்கான செயல்முறை தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு வேலூர் மத்திய சிறையில் நடைபெற உள்ளது.
முடி திருத்துநர், இரவுக் காவலர் ஆகிய இரு பணிகளுக்கும் எழுதப்ப டிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் பெற முடியும்.
எஸ்சி., எஸ்சிஏ., எஸ்டி., பிரிவி னருக்கு 18 முதல் 37 வயது வரையும், பிசி., எம்.பி.சி., பிசி (எம்) பிரிவின ருக்கு 34 வயது வரையும், ஓசி பிரிவி னருக்கு 32 வயது வரையும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுடையவர்கள் கல்வி, ஜாதிச் சான்று, வயது வரம்புச் சான்று, வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல்களுடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ரூ.30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரியிட்ட உறை ஆகியவற்றை யும் இணைத்து விண்ண ப்பத்தை தபால் மூலம் சிறைக் கண்காணிப் பாளர், மத்திய சிறை, வேலூர் என்ற முகவரிக்கு டிசம்பர் 20- ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.