உள்ளூர் செய்திகள்

விஜிலென்ஸ் சிறப்பு குழுவினர் 5-வது நாளாக விசாரணை

Published On 2022-09-12 14:50 IST   |   Update On 2022-09-12 14:50:00 IST
  • சென்னை வனத்துறை விஜிலென்ஸ் பிரிவு உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் சிறப்பு குழுவினர்.
  • தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் விசாரணையை தொடர்ந்தனர்.

சேலம்:

சேலம் மாவட்ட வனத்துறை திட்டப்பணிக ளில் முறைகேடு மற்றும் வன நிலங்கள் விற்பனை புகார் குறித்து விசாரிக்க சென்னை வனத்துறை விஜிலென்ஸ் பிரிவு உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் சிறப்பு குழுவினர் கடந்த 8-ந் தேதி சேலம் வந்தனர்.

அவர்கள் தொடர்ந்து அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் கோட்ட வன அலுவலகம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா , கருமந்துறை வனப்பகுதி ஆகிய இடங்களில் குழுவாக பிரிந்து வனத்துறையினரிடம் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் விசாரணையை தொடர்ந்தனர். மேலும் ஆவணங்கள்அ டிப்படையில் அறிக்கை தயாரிக்கும் பணியிலும் குழுவினர் ஈடுபட்டு வரு கிறார்கள். இதனால் இதில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News