உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த தோளிபட்டி கிராம மக்கள்.


விலையில்லா மாடுகள் வழங்க லஞ்சம் ஊராட்சி தலைவர் மீது கிராம மக்கள் பரபரப்பு புகார்

Published On 2022-07-18 13:40 IST   |   Update On 2022-07-18 13:40:00 IST
  • விலையில்லா மாடுகள் வழங்க லஞ்சம் ஊராட்சி தலைவர் மீது கிராம மக்கள் பரபரப்பு புகார் அளித்தனர்.
  • திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் விலையில்லா மாடுகள் வழங்க லஞ்சம், ஊராட்சி தலைவர் மீது கிராம மக்கள் பரபரப்பு புகார்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள தோளிப்பட்டி கிராமத்தை ேசர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அவர்கள் தெரிவிக்கையில்,

தோளிப்பட்டி பஞ்சாயத்தில் தமிழக அரசால் 50 பேருக்கு விலையில்லா கறவை மாடு வழங்கப்பட்டது. இதற்காக பஞ்சாயத்து தலைவர் சுமதி மற்றும் அவரது கணவர் ராமசாமி ஆகியோர் மாடு ஒன்றுக்கு ரூ.13,500 லஞ்சமாக எடுத்துக் கொண்டு மீதி தொகையை கொடுத்தனர். எதற்காக இந்த பணத்ைத எடுத்தீர்கள்? என்று கேட்டதற்கு டாக்டர், தாசில்தார் மற்றும் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும்.

இதேபோல 50 பேரிடமும் கறவை மாடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

மேலும் தோளிப்பட்டி காலனிக்கு அருகில் புறம்போக்கு நிலம் 16 ஏக்கருக்கு மேலாக உள்ளது. தற்போது அரசின் மூலம் தரிசு நிலங்களில் மேய்சலுக்காக புல் போட்டு வேலை செய்யபோவதாக ஊராட்சி தலைவர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர் மூலம் தகவல் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் விளையாட்டு மைதானமாக உள்ள இப்பகுதியில் தோட்ட நிலங்களுக்கு பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மனுவாக மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் அளித்துள்ளோம் என்றனர்.

Tags:    

Similar News