விளாத்திகுளம் அருகே அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராமமக்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பக்கத்து கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பெ ற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பாமல் உள்ளனர்.
- அரசின் இலவச ஆடு, மாடுகள் தொடங்கி 100 நாட்கள் வேலைத்திட்டம், அரசின் தொகுப்பு வீடு, முறையான குடிநீர் வசதி செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது தொப்பம்பட்டி என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் சாலை வசதி, மின்விளக்கு, மயானம், கழிவுநீர் கால்வாய், அங்கன்வாடி மையம் என அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தொப்பம்பட்டி கிராமமக்கள் கூறியதாவது:-
எங்கள் ஊரின் பெயர் பலகை கூட இல்லை. மெயின் ரோட்டில் இருந்து தொப்பம்பட்டி கிராமத்திற்கு செல்வதற்கான சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் தான் கிராம மக்கள் சென்று வருகின்றனர். அதிலும், மின்விளக்கு வசதி எதுவும் இதுவரை செய்து தரப்படாததால் இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். இக்கிராமத்தில் கால்வாய் வசதி தற்போது வரை செய்து தரப்படாமல் உள்ளது.
கிராமத்து குழந்தைகளுக்கு ஒரு அங்கன்வாடி மையம் கூட கட்டப்படாததால், 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பக்கத்து கிராம த்திற்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் பெ ற்றோர்கள் தங்கள் குழந்தை களை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பாமல் உள்ளனர். இங்குள்ள மக்கள் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீட்டி லும், ஓட்டு வீடுகளிலுமே தங்களது வாழ்க்கையை நடத்து கின்றனர்.
தொப்பம்பட்டி கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு கால்வாய் வசதி, மின் விளக்கு, சாலை வசதி, நூலகம், மயானம், பொது குளியல் தொட்டி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும்படி ஊராட்சிமன்றத் தலை வரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நிதியில்லை என கூறி அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் உள்ளார்.
மேலும் அரசின் இலவச ஆடு, மாடுகள் தொடங்கி 100 நாட்கள் வேலைத்திட்டம், அரசின் தொகுப்பு வீடு, முறையான குடிநீர் வசதி என எதுவுமே செய்துதராமல் தவிர்த்து வருகிறார். அரசு அதிகாரிகளும் எங்கள் கிராமத்தை புறக்கணித்து வருகிறார்கள்.
குறிப்பாக அடிப்படை வசதிகள் கூட இல்லாத தொப்பம்பட்டி கிராமத்திற்கு திருமண சம்பந்தம் பேச வரும் பிற ஊர்களை சேர்ந்த வர்கள் பெண் கொடுக்கவும், பெண் எடுக்கவும் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர அதிகாரிகள் முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.