விநாயகர் சதுர்த்தி விழா திண்டுக்கல்லில் 60 சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு
- இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த உள்ளனர்.
- இதற்காக பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல்:
நாடு முழுவதும் வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த உள்ளனர். இதற்காக பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தாமரை விநாயகர், சிவன் விநாயகர், அன்ன விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத சிலைகள் தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட இடங்களில் வைத்து வழிபாட்டுக்கு பின் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. திண்டுக்கல் நகர் பகுதியில் பொது இடங்களில் 60 சிலைகள் வைக்க இந்து அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சிவசேனா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து தர்ம சக்தி உள்ளிட்ட அமைப்பினர் சார்பிலும் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும் என போலீசார் தெரிவி த்திருப்பதால் சிலைகள் வைத்தற்கான இடங்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.