விருதுநகர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை
- விருதுநகர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 50). இவர் தனது 2-வது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்காக செலவுக்கு அவரது தந்தை சேவுகன் மற்றும் தாய் வள்ளியம்மாளிடம் பணம் கேட்டு சென்றார். ஆனால் அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறி விட்டனர். இதனால் முத்துப்பாண்டி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுபோதையில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்துப்பாண்டி மனைவி மாரியம்மாள் ெகாடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நல்லூர்பட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (30). இவருக்கு ஒரு வருடத்திற்கு மேலாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா கொடுத்தபுகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தங்கல் அருகே செங்கமலநாச்சியாபுரம் சாரதா நகரை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவரது மகன் ஜெகநாதன் (20). இவர் உறவினர் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு வீட்டாரும் பேசி பெண்ணின் படிப்பு முடிந்த பின்னர் திருமணத்தை உறுதி செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர். அதுவரை பெண்ணை தொந்தரவு செய்யாமல் இருக்கும்படி ெஜகநாதனுக்கு அறிவுரை கூறி உள்ளனர். ஆனால் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளனர். இதனை இருவீட்டாரும் கண்டித்தனர். இதனால் விரக்தி அடைந்த ஜெகநாதன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.