- விருதுநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- புதிய நிர்வாகிகளை நியமித்து தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நகர் பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
விருதுநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அருப்புக்கோட்டை நகர் பகுதி அவைத்தலைவராக கணேசன், செயலாளராக மணி, பொருளாளராக பெரியசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ராஜபாளையம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக பிச்சைக்கனி, செயலாளராக மணிகண்ட ராஜா, பொரு ளாளராக செந்தில்குமார் ஆகியோரும், ராஜபாளையம் தெற்கு மாவட்ட அவைத்தலைவராக பிச்சை, செயலாளராக ராமமூர்த்தி, பொருளாளராக புதிய ராஜ் ஆகியோர் நியமிக்க ப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அவைத் தலைவராக பலராமன், செயலாளராக முனீஸ்வரன், பொருளாளராக பாலமுருகனும், சாத்தூர் அவைத்தலைவராக நாச்சியப்பன், செயலாளராக குருசாமி, பொருளாளராக நாகநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
விருதுநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட விருதுநகர் நகர் அவை த்தலைவராக காசிராஜன், செயலாளராக தனபாலன், பொருளாளராக துளசி ராம் ஆகிய நியமனம் செய்ய ப்பட்டுள்ளனர்.