உள்ளூர் செய்திகள்

இலவச பொது மருத்துவ முகாமில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

இலவச பொது மருத்துவ முகாம்

Published On 2023-10-09 14:12 IST   |   Update On 2023-10-09 14:12:00 IST
  • எஸ்.பி.கே. கல்லூரி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
  • 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் ஏ.என்.டி. கல்வி மருத்துவம் சமூகம் மேம்பாட்டு அறக்கட் டளை, வாசன் கண் மருத்து வமனை, மதுரை பாண்டி யன் மருத்துவமனை மற்றும் சவுண்ட்ஸ் குட் ஹியரிங் கேர் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் இருதய நோய், காது மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட் டது.

இந்த முகமினை எஸ்.பி.கே. கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட அணியினர் ஏற்பாடு செய்தனர். இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இலவச பரிசோதனை செய்து கொண்டனர். முகாமிற்கு ஏ.என்.டி. கல்வி மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் பேராசிரியர் டாக்டர் தி.ஜெய ராஜசேகர் தலைமை தாங்கினார்

அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலை வர் பி.கே.காமராஜ் முகா மினை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.பி.கே. கல்விக் குழும தலைவர் எம்.ஜெயக்குமார் கலந்து கொண்டார். எஸ்.பி.கே. கல்லூரியின் முதல் வர் முனைவர் கே. செல்லத் தாய் வரவேற்றார். துணை முதல்வர் முனைவர் டி.ஜாக்குலின் பெரியநாயகம், கல்லூரி தலைவர் டி.வி.சங்கர், உதவி செயலாளர் முத்து தினகரன், உதவி தலைவர் எஸ்.சண்முகவேல், பொருளாளர் கே.சுந்தர், உதவி செயலாளர் எம்.பிரகதீஷ் பிரபு, பாண்டியன் மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியை ஒருங்கி ணைப்பாளர்கள் பேராசி ரியை எம்.அனிதா பொரு ளாளர் திருவேங்கடம் ராமா னுஜம் ஆகியோர் ஒருங்கி ணைத்தனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உடல் பரி சோதனை செய்து கொண் டனர்.

Tags:    

Similar News