உள்ளூர் செய்திகள்
- 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் மது குடித்து வந்தார் இதனை மனைவி ராக்கம்மாள் (42) கண்டித்தார். இதில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த ராக்கம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கண்மாய்பட்டி மனோகரன் காலனியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி தேவதாய் (69). உடல்நல குறைவு காரணமாக விரக்தியில் இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.