உள்ளூர் செய்திகள்
மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது வழக்கு
- மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் ஜெகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சாத்தூர் அருகே வல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பனையடிப்பட்டிக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அந்த பஸ் முன்னதாக சென்று விட்டதால் அவர் குறுக்குப்பாதையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்ற வாலிபர் மாணவியை வழிமறித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். மாணவி சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி ஆசிரியை பாண்டியம்மா தேவியிடம் தெரிவித்துள்ளார்.
அவர் உனது பெற்றோரை அழைத்துச் சென்று போலீசில் புகார் செய் என்று தெரிவித்துள்ளார். அதன்படி சாத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார்.
அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் ஜெகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.