உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்கள்.

நத்தத்தில் தொழில் பயிற்சி முகாம்

Published On 2022-09-11 10:49 IST   |   Update On 2022-09-11 10:49:00 IST
  • படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி தேர்வு முகாம் நடந்தது.
  • இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நத்தம்:

நத்தம் அரசு துரைக்கமலம் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி தேர்வு முகாம் நடந்தது. இதற்கு திட்ட இயக்குநர் சரவணன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தொழில் மைய மேலாளர் அருண்குமார், திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குநர் குணசேகரன், கனரா வங்கி தொழிற்பயிற்சி மேலாளர் சபரீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு வரவேற்றார்.

மொபைல் போன் சர்வீஸ், தையல், இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல், சில்லரை வணிகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு பயற்சி பெற தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் நத்தம் வட்டார அளவில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இயக்குனர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News