நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் விஷ்ணு தகவல்
- கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்-அமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது.
- நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தகுதிகளை உடைய பெண்கள் தங்களுடைய சுய விவரங்களுடன், வருகிற 30-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நெல்லை:
துணிவு மற்றும் வீரதீர செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்-அமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. துணிச்சல் மற்றும் வீரதீர செயல்கள் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரிவான தன் விவர குறிப்பு உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் https://award.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்விருதிற்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தகுதிகளை உடைய பெண்கள் தங்களுடைய சுய விவரங்களுடன், வருகிற 30-ந்தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், பி4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை, நெல்லை மாவட்டம்-627002 என்ற முகவரிக்கு நேரில் வந்து கருத்துக்கள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.