உள்ளூர் செய்திகள்

கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் 58 சார் பதிவாளர்களுக்கு பதவி உயர்வு

Published On 2022-09-18 14:13 IST   |   Update On 2022-09-18 14:13:00 IST
  • துணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கி நேற்று உத்தரவிடப்பட்டது.
  • இதற்கான உத்தரவை கூட்டுறவுத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

சேலம்:

தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் சார் பதிவாளர்கள் நிலையில் பணியாற்றி வரும் 58 பேருக்கு துணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு வழங்கி நேற்று உத்தரவிடப்பட்டது.

அதன்படி, சேலம் மண்டலத்தில் பணிபுரிந்து வரும் குமார், கோபால், சின்னபையன், தனசேகரன், வெங்கடேசன், நாமக்கல் மண்டலத்தில் பணிபுரிந்து வரும் பரமசிவன், ரவிச்சந்திரன், நாகராஜன் உள்பட 58 கூட்டுறவு சார்பதிவாளர்களுக்கு துணைப்பதிவாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணைப் பதிவாளராக பரமசிவன், கிருஷ்ணகிரி பொது வினியோக திட்டத்தின் துணைப்பதிவாளராக குமார், திருச்செங்கோடு கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளராக ராம்குமார், தர்மபுரி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளராக மதியழகன், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைப்பதிவாளராக நாகராஜன் உள்பட 58 கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை கூட்டுறவுத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News