தஞ்சையில், உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி
- பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக புறப்பட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் , பள்ளிக்கல்வித்துறை மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று காலை தஞ்சாவூர் ரெயில் நிலையம் முன்பு பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம் என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. இப்பேரணியினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மண்வளம் காப்போம், துணிப்பையை பயன்படுத்து வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக புறப்பட்டனர்.
இந்தப் பேரணி ஜூபிடர் தியேட்டர் முன்பு முடிவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயபிரியா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா, தாசில்தார் சக்திவேல், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, கவின்மிகு தஞ்சை இயக்கம் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.