உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.
- சூர்யாவை கைது செய்து அவரிடமிருந்து திருடிய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது47). இவர் சம்பவத்தன்று தனது விவசாய நிலத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியவர் திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு முஸ்லிம் தெருவை சேர்ந்தபழனி மகன் சூர்யா(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்பெஸ்க்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் அகரம்பள்ளிப்பட்டுக்கு விரைந்து சென்று சூர்யாவை கைது செய்து அவரிடமிருந்து திருடிய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.