இந்தியா

உ.பியில் குடியிருப்பு கட்டடம் இடிந்த விபத்தில் 10 பேர் பலி.. மீட்புப் பணிகள் தீவிரம் - வீடியோ

Published On 2024-09-15 11:30 IST   |   Update On 2024-09-15 11:30:00 IST
  • ஜாகிர் நகர் பகுதியில் உள்ள 3 மாடி வீடு நேற்றைய தினம் மாலை 5.15 அளவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
  • 24 எருமை மாடுகளும் உள்ளே சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் நேற்றைய தினம் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மீரட்டில் உள்ள ஜாகிர் நகர் பகுதியில் உள்ள 3 மாடி வீடு நேற்றைய தினம் மாலை 5.15 அளவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

இதில் 15 உள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில் ஜேசிபி உள்ளிட்டிட இயந்திரங்கள் கொண்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  15 பேறும் மீட்கப்பட்ட நிலையில் அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாஜித் (40), அவரின் மகள் சானியா(15), மகன் சாகிப்(11), ஒன்றரை வயதான சிம்ரா, 7 வயதான ரீசா, 63 வயதான நாபோ, 20 வயதான பர்கானா, 18 வயது பெண் ஆலிசா, 6 வயது சிறுமி ஆலியா ஆகியோர் உயிரிழந்தவர்களில் அடங்குவர். படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தின் உரிமையாளர் அங்கேயே மாட்டுத் தொழுவமும் வைத்திருந்த நிலையில் 24 எருமை மாடுகளும் உள்ளே சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளே யாரேனும் சிக்கியுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News