இந்தியா

முடிவுக்கு வரும் 151 ஆண்டுகால சகாப்தம்.. கொல்கத்தாவில் டிராம் வண்டி சேவைகளை நிறுத்த அரசு முடிவு

Published On 2024-09-24 20:09 IST   |   Update On 2024-09-24 20:09:00 IST
  • நாட்டில் விதி விதிவிலக்காக கொல்கத்தாவில் மட்டுமே டிராம் சேவைகள் தொடர்ந்து வருவகிறது.
  • டிராம் சேவையை நிறுத்துவதற்கான முடிவுக்கு எதிராக டிராம் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

கொல்கத்தாவில் 150 ஆண்டு காலமாக இயங்கி வந்த டிராம் வண்டி சேவை விரைவில் முடிவுக்கு வர உள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் புறநகர்களில் பிரபலமான போக்குவரத்தாக இருந்த டிராம் வண்டிகள் நாட்டில் தற்போது கொல்கத்தாவில் மட்டுமே இயங்கி வருகிறது. சென்னை மாகாணமாக இருந்த சமயத்தில் இங்கும் டிரம்ப் சேவைகள் பிரசித்தி பெற்றவை. ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தில் சென்னையில் நகரின் ஊடே டிரம்ப் சேவைகள் இருந்தது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

பேருந்து உள்ளிட்ட சேவைகள் வந்த பிறகு டிராம் சேவைகள் நாட்டில் படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக காணாமல் போனது. ஆனால் விதி விதிவிலக்காக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மட்டுமே இன்னும் செயல்பட்டு அந்நகருக்கு தனித்தன்மையாக அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. ஆனால் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளைக் காரணம் காட்டி அந்த சேவையை முற்றிலுமாக நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இதன்மூலம் கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவை சகாப்தம் வருந்தத்தக்க வகையில் முடிவுக்கு வர உள்ளது. டிராம்களின் குறைவான வேகத்தால் பீக் ஹவர் டிராஃபிக் நெரிசல் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே இனி இதனைத்தொடர்வது சாத்தியமில்லை என்று அம்மாநில போக்குவரத்துத்துறை சினேகசிஸ் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இருப்பினும் டிரம்ப் பாரம்பரியத்தின் நினைவாக மைதான் முதல் எஸ்பிளனேட் [Maidan to Esplanade] டிரம்ப் வழித்தடம் மட்டும் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் டிராம் சேவையை நிறுத்துவதற்கான முடிவுக்கு டிராம் ஆர்வலர்கள் மற்றும் கொல்கத்தா டிராம் பயனர்கள் சங்கம் (CUTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் மணிக்கு 20-30கிமீ வேகம்வரை ஓடக்கூடிய டிராம்கள் மெதுவாக நகர்கிறது என்று கூறுவது தவறு என்றும் அரசின் இந்த முடிவை எதிர்த்தும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News