இந்தியா
ஆகஸ்ட் மாதத்தில் 1.59 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல் - மத்திய நிதியமைச்சகம்
- ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.59 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
- ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1.65 கோடியாக இருந்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது.
இந்நிலையில், மொத்தமாக ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 1.59,069 லட்சம் கோடி கிடைத்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 612 கோடியாக இருந்தது. இந்தாண்டு 2023 ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.59 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் 11 சதவீத வருவாய் வளர்ச்சி கண்டுள்ளது என வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.