செய்திகள்

16 ஆண்டு உண்ணாவிரதத்தை முடித்து திருமணம் செய்ய விரும்பும் மணிப்பூர் இரும்பு மங்கை: புதிய தகவல்

Published On 2016-07-26 15:15 IST   |   Update On 2016-07-26 15:15:00 IST
மணிப்பூர் மாநிலத்தில் 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்துவரும் ஐரோம் ஷர்மிளாவின் வாழ்வில் வெகு விரைவில் வசந்தம் அரும்பவுள்ளதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
இம்பால்:

மணிப்பூரின் இரும்புப்பெண் என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, அம்மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற கோரி கடந்த 2000-ம் ஆண்டு முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அடிக்கடி, விடுதலையாவதும், பின்னர் மீண்டும் உண்ணாவிரதம் இருந்த குற்றத்திற்காக கைதாவதுமாக ஒரு போராளியாகவே கடந்த 16 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஐரோம் ஷர்மிளாவின் வாழ்வில் வெகு விரைவில் வசந்தம் அரும்பவுள்ளதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஐரோம் ஷர்மிளா வரும் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதியுடன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள உள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்ளவும், தேர்தலில் போட்டியிடவும் அவர் விரும்புவதாக கூறியுள்ளார்.

Similar News