செய்திகள்
சாலையில் குடித்துவிட்டு ஆட்டம் - கர்நாடக அமைச்சரின் மகனுக்கு அடி, உதை
கர்நாடக வனத்துறை அமைச்சரின் மகன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு சாலையில் ஆட்டம் போட்டு, பொது மக்களிடம் அடி வாங்கியுள்ளார்.
பெங்களூர்:
கர்நாடக மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் ராமநாத் ராய். இவரது மகன் தீவு ராய். இவர் கடந்த ஞாயிறு அன்று, கொடகு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமங்களா கிராமத்தில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான சாலையில் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துள்ளார். பிறகு காரில் அதிக சத்தத்துடன் பாட்டு போட்டுவிட்டு, அங்கிருந்தவர்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த அப்பகுதியினர் அமைச்சரின் மகனை கண்டித்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அமைச்சரின் மகனும், அவரது நண்பர்களும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
மோதல் முற்றியதை அடுத்து திப்புவின் நண்பர்கள் தப்பிவிட, அவர் மட்டும் சம்பவம் நடந்த பகுதியில் சிக்கிக்கொண்டுள்ளார். அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.