செய்திகள்

பப்புவா நியூ கினியா சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓட்டம் - 17 பேர் சுட்டுக் கொலை

Published On 2017-05-15 10:49 IST   |   Update On 2017-05-15 10:49:00 IST
பசுபிக் பெருங்கடலில் உள்ள குட்டி நாடான பப்புவா நியூ கினியாவில் சிறை சுற்றுச் சுவரை உடைத்து கைதிகள் தப்பி ஓடியதால், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 கைதிகள் பலியாகினர்.
போர்ட் மோரெஸ்பை:

பசுபிக் பெருங்கடலில் உள்ள குட்டி நாடான பப்புவா நியூ கினியாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய நகரமான லே-யில் இருக்கும் புய்மோ சிறையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்து வெள்ளிக்கிழமை இரவில் கைதிகளில் ஒரு பிரிவினர் சிறையின் சுற்றுச்சுவரை உடைத்து தப்பி ஓடினர். இதனால், பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் தப்பியோடிய கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சுமார் 17 கைதிகள் கொல்லப்பட்டனர்.

சிறைக்கு அருகிலுள்ள பகுதிகளில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் போது பதுங்கியிருந்த 57 கைதிகள் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையிலடைக்கப்பட்டனர். கடந்தாண்டு இதே சிறையில் கைதிகள் தப்பியோடிய போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News