செய்திகள்
திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிவு
திருப்பதி மலைப்பாதையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் பொக்லைன் மூலம் பாறைகளை அகற்றி அப்புறப்படுத்தினர்.
திருமலை:
கோடை விடுமுறையை யொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. நடைபாதை வழியாக ஏராளமான பக்தர்கள் வந்து தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பதி மலைப்பாதையில் திருமலையில் இருந்து வாகனங்கள் கீழே இறங்கி வரும் சாலையில் 9வது கி.மீ. தூரத்தில், மலையில் இருந்து திடீர் என பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால் விபத்து எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து, தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொக்லைன் மூலம் பாறைகளை அகற்றி அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக திருமலையில் அதிக வெப்பம் நீடித்ததால், பாறைகளில் விரிசல் ஏற்பட்டு உடைந்து விழுந்து இருக்கலாம். இதுபோன்று பாறைகள் மேலும் உடைந்து விழாத வகையில் மலைப்பாதையை சுற்றி தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.