செய்திகள்
ஆறாவது நாளாக தொடரும் கூர்காலாந்து போராட்டம் - சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி
மேற்குவங்கத்திலிருந்து பிரிந்து கூர்காலாந்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கூர்கா ஜனமுக்தி மோர்சா கட்சி நடத்தும் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்வதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு நகரமான டார்ஜிலிங் மலைப் பகுதி மக்கள், தங்கள் பகுதியை மேற்கு வங்கத்தில் இருந்து பிரித்து கூர்காலாந்து எனும் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த
வண்ணம் உள்ளனர். அவ்வப்போது, இது தொடர்பான போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்துவர். இதனையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடும்.
இம்முறை, அம்மாநிலத்தில் 10-ம் வகுப்பு வரை வங்கமொழி கட்டாயம் படிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூர்க்காலாந்து விவகாரம் மீண்டும் வெடித்தது. உடனே, அம்மாநில முதல்வர் மம்தா
பாணர்ஜி மேற்குவங்க மாநிலத்தின் கோடைக்கால தலைநகராக டார்ஜிலிங் செயல்படும் என அதிரடியாக அறிவித்தார்.
இருப்பினும், கடந்த திங்கள் முதல் கூர்காலாந்து பகுதியில் முழு அடைப்புக்கு கூர்கா ஜனமுக்தி மோர்சா கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஆறாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்வதால் சுற்றுலா ஸ்தலமான டார்ஜிலிங் முற்றிலும் முடங்கியுள்ளது. அப்பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த ஏராளமான பேர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.