செய்திகள்

ஸ்ரீநகர் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: பாகிஸ்தான் தீவிரவாதியை மீட்டுச் சென்ற தீவிரவாதிகள்

Published On 2018-02-06 12:54 IST   |   Update On 2018-02-06 12:54:00 IST
ஸ்ரீநகர் மருத்துவமனையில் தீவிரவாதிகள் இன்று துப்பாக்கி சூடு நடத்தி, அங்கிருந்து பாகிஸ்தான் கைதியை தப்ப வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #JammuAndKashmir
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீமகாராஜ் ஹரி சிங் மருத்துவமனையில் பாகிஸ்தான் கைதி நவீத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக போலீசார் இன்று அழைத்து வந்தனர். இதையொட்டி மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கைதியை போலீசார் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அந்த மருத்துவமனைக்குள் தீவிரவாதிகள் சிலர் புகுந்து போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சுதாரித்து பதில் தாக்குதல் நடத்துவதற்குள், சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கைதியை தீவிரவாதிகள் மீட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.



தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணியில்  போலீசார் ஈடுபட்டுள்ளனர்.   #Tamilnews

Similar News