செய்திகள்
கொழிஞ்சாம்பாறையில் விபத்து- வாலிபர் பலி
கொழிஞ்சாம்பாறையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை சின்னநடுகளத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் வினோத்குமார் (வயது 24). இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் கொழிஞ்சாம்பாறையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் கண்ணன்மேடு அருகே உள்ள கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது அந்த வழியே திருச்சூர்- கோவைக்கு தனியார் பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வினோத்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்றி அவர் இறந்து விட்டார்.
இது குறித்து கொழிஞ்சாம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.