செய்திகள்
கொரோனா வைரஸ்

டெல்லியில் மேலும் 1,007 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-06-08 23:33 IST   |   Update On 2020-06-08 23:33:00 IST
தலைநகர் டெல்லியில் 1,007 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
புதுடெல்லி:

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளது.



இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மேலும் 1,007 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 29,943 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 17 உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை லியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 874 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 11,357 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 17,712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News