இந்தியா
முக கவசம் அணிந்துள்ள மக்கள்

நாட்டில் முக கவசம் அணிவது குறைந்துவிட்டது - மத்திய அரசு எச்சரிக்கை

Published On 2021-12-11 00:08 GMT   |   Update On 2021-12-11 00:08 GMT
கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தடுப்பூசி போட்டிருக்கும் தைரியத்தில் பலர் முக கவசத்தை முறையாக அணியாத நிலை அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:

உலக நாடுகளை தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 32 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்  விமான நிலையங்களில் சர்வதேச பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், நாட்டு மக்கள் மத்தியில் முக கவசம் அணியும் பழக்கம் குறைந்துவிட்டது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, நிதி ஆயோக் குழு  உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: 

இந்தியாவில் முக கவசம் பயன்பாடு கொரோனா இரண்டாவது அலைக்கு முந்தைய காலத்திற்கு நிகரான அளவுக்கு குறைந்துள்ளது. அந்த வகையில் மீண்டும் ஒரு ஆபத்து மண்டலத்திற்குள் நுழைந்துள்ளோம். 

முக கவசம், தடுப்பூசி இரண்டுமே மிக முக்கியமானவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சர்வதேச சூழலில் இருந்து மக்கள் கண்டிப்பாக பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 

Similar News