இந்தியா
பென்ஸ் காரை பரிசளித்த கேரள தொழிலதிபர்

22 ஆண்டு பணிசெய்த ஊழியருக்கு பென்ஸ் காரை பரிசாக அளித்த தொழிலதிபர்

Published On 2022-02-10 15:10 GMT   |   Update On 2022-02-10 15:10 GMT
தொழிலதிபர் ஒருவர் தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசளித்து அசத்தியுள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏ.கே.ஷாஜி என்பவர் மைஜி என்ற மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சுமார் 22 ஆண்டாக பணியாற்றி வரும் அனிஷ் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், அனிஷின் 22 ஆண்டுகால விசுவாசத்திற்கு பரிசாக 1 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஷாஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கடந்த 22 ஆண்டாக எனக்கு ஒரு வலுவான தூணாக இருக்கிறீர்கள். தற்போது புதிய பயணக் கூட்டாளியை நீங்கள் நேசிப்பீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், அனீஷ் குடும்பத்துக்கு அளித்த காருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, ஷாஜி கடந்த இரு ஆண்டுக்கு முன் 6 ஊழியர்களுக்கு தலா ஒரு காரை பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News