இந்தியா
உ.பியில் லாரி மோதி 2 ஆசிரியர்கள் பலி
இந்த விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இருவரும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ரேபரேலி:
உத்திரப்பரதேசம் ரேபரேலி மாவட்டத்தில் 2 ஆசிரியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசோக் குமார், சூர்யாபான் என்ற இருவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றனர். இருவரும் திருமண நிகழ்வு ஒன்றிருக்கு சென்றுவிட்டு திரும்பும்போது அவர்கள் வந்துகொண்டிருந்த பைக்கில் லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கில் தூக்கியெறியப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரும், உடனிருந்த உதவியாளரும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.