இந்தியா
சுவாமி ராமபத்ராசார்யா, இந்தி பாடலாசிரியர் குல்சாருக்கு ஞானபீட விருது
- குல்சார் இந்தி பட உலகில் முன்னணி பாடலாசிரியர் ஆவார்.
- சிறந்த உருது கவிஞர்களில் ஒருவராகவும் அவர் கருதப்படுகிறார்.
புதுடெல்லி:
சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சார்யா மற்றும் புகழ்பெற்ற உருது கவிஞர் குல்சார் ஆகியோருக்கு 2023-ம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சித்ரகூடத்தில் உள்ள துளசி பீடத்தின் தலைவரான ராமபத்ராச்சார்யா, புகழ்பெற்ற இந்து ஆன்மீகத் தலைவர், கல்வியாளர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர்.
குல்சார் இந்திப் பட உலகில் முன்னணி பாடலாசிரியர் ஆவார். சிறந்த உருது கவிஞர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
2002 -ல் சாகித்ய அகாடமி விருது பெற்ற குல்சார் 2013-ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 5 முறை தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.