இந்தியா

76வது குடியரசு தினம் - விசேஷ டூடுல் வெளியிட்ட கூகுள்

Published On 2025-01-26 06:35 IST   |   Update On 2025-01-26 06:35:00 IST
  • குடியரசு தினத்தைக் குறிக்கும் வகையில் டூடுலாக இடம்பெற்றுள்ளன.
  • இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது.

உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையை வழங்கி வரும் கூகுள் விசேஷ நாட்களில் சிறப்பு டூடுல் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், இன்று இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை ஒட்டி கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

அதில், லடாக்கி உடையில் ஒரு பனிச்சிறுத்தை, பாரம்பரிய இசைக்கருவியைுடன் வேட்டி-குர்தா அணிந்த 'புலி' மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் அதன் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தும் சில விலங்குகள் மற்றும் பறவைகள் 76வது குடியரசு தினத்தைக் குறிக்கும் வகையில் டூடுலாக இடம்பெற்றுள்ளன.

முதலாம் உலக போருக்கு பின் ஐரோப்பியாவில் துவங்கிய கலை மற்றும் பண்பாட்டு இயக்கமான சர்ரியலிசத்தின் கூறுகள் கலந்த வண்ணமயமான கலைப்படைப்பாக இந்த டூடுல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கூகுள் (Google) ஆறு எழுத்துக்களை கருப்பொருளில் கலைநயத்துடன் பின்னிப் பிணைத்து, 'வனவிலங்கு அணிவகுப்பு' தோற்றத்தை அளிக்கிறது.

இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்று டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் இந்தியா தனது இராணுவ வலிமை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும். வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பதினாறு அலங்கார ஊர்திகள், மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 15 ஓவியங்கள் அணிவகுப்பு நடைபெற இருக்கிறது.

கூகுள் வலைதளத்தில் டூடுலின் விளக்கமாக, "இந்த டூடுல் இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. இது தேசிய பெருமை மற்றும் ஒற்றுமையை குறிக்கும் நாள் ஆகும்," என்று கூறுகிறது.

இந்த ஓவியத்தை புனேவைச் சேர்ந்த கலைஞர் ரோஹன் தஹோத்ரே வரைந்துள்ளார். அணிவகுப்பில் சித்தரிக்கப்பட்டுள்ள விலங்குகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைக் குறிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News