ஓடும் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ரெயில்வே ஊழியர் அடித்துக் கொலை
- உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோ-கான்பூர் இடையே செல்லும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் [Humsafar Express] விரைவு ரெயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது
- தனது பெர்த் -இல் வந்து அமரும்படி அழைத்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
ஓடும் ரெயிலில் 11 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய ரெயில்வே ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ-கான்பூர் இடையே செல்லும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் [Humsafar Express] விரைவு ரெயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
தனது குடும்பத்துடன் பயணித்துக்கொண்டிருந்த 11 வயது சிறுமி தனியாக இருப்பதைப் பார்த்த பிரசாந்த் குமார் [34 வயது] என்ற ரெயில்வே ஒப்பந்த ஊழியர் தனது பெர்த் -இல் வந்து அமரும்படி அழைத்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
தனது தாய் வந்தவுடன் அந்த சிறுமி நடந்ததைக் கூறவே, சிறுமியின் குடும்பத்தினரும், அந்த பெட்டியில் பயணித்த சக பயணிகளும் இணைந்து பிரசாந்த் குமாரை சுமார் ஒன்றரை மணி நேரமாக சரமாரியாகத் தாக்கினர். பின் கான்பூர் சென்ட்ரல் ஸ்டேஷனில் அவர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.