இந்தியா
சீதா தேவிக்கு பிரமாண்டமாக கோவில் கட்டப்படும்- அமித் ஷா
- சீதாதேவிக்கு ஒரு பிரமாண்ட கோவில் கட்ட வேண்டிய நேரம் இது.
- வாழ்க்கை வரலாறு எல்லா வகையிலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலின் போது நான் பீகார் சென்ற போது ராமர் கோவில் கட்டப்பட்டதாக கூறினேன். இப்போது சீதாதேவிக்கு ஒரு பிரமாண்ட கோவில் கட்ட வேண்டிய நேரம் இது. இந்த கோவில் முழு உலகிற்கும் பெண் சக்தியின் செய்தியையும், வாழ்க்கை வரலாறு எல்லா வகையிலும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கும் வகையில் இருக்கும்.
குஜராத்தில் குடியேறிய மிதிலாஞ்சல் மற்றும் பீகாரை சேர்ந்த மக்கள் அதன் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் மாநிலத்தில் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் இருக்கின்றனர்.