இந்தியா

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடக்கம்

Published On 2025-03-10 06:56 IST   |   Update On 2025-03-10 06:56:00 IST
  • நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
  • இந்த நிலையில், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பிப்ரவரி 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. மேலும், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இந்த நிலையில், இரு அவைகளும் இன்று (மார்ச் 10-ம் தேதி) வரை ஒத்திவைக்கப்பட்டன.

அந்த வகையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இந்த அமர்வில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் நிலைக்குழு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளன. அதன்படி இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள வரிவிதிப்பு நடவடிக்கை, பாராளுமன்ற தொகுதி மறுவரையறை என பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Tags:    

Similar News