இந்தியா

அமித் ஷா-வுக்கு வயிற்றெரிச்சல் - திருமாவளவன்

Published On 2024-12-18 08:43 GMT   |   Update On 2024-12-18 08:43 GMT
  • தமிழ்நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
  • அம்பேத்கர் பற்றி நாடே பேசுவதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

உள் துறை அமைச்சர் அமித் ஷாவினுடைய அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு தொடர்ச்சியாக தமிழ்நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷாவின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

* புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி நாடே பேசுவதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?

* சங்பரிவார்கள், புரட்சியாளர் அம்பேத்கரை போற்றுவதெல்லாம் மக்களை ஏய்க்கும் ஏமாற்று வேலை.

* அரசமைப்பு சட்டமும், புரட்சியாளர் அம்பேத்கரும் தான் சங்பரிவார்களின் உண்மையான எதிரிகள்.

* எவ்வளவு வயிற்றெரிச்சல் என்பதை அமித்ஷா வெளிப்படுத்திவிட்டார். மேலும் அமித்ஷா தனது முகத்திரையை தானே கிழித்துக்கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News