இந்தியா

எங்களுக்கு வானுலக சொர்க்கம் தேவையில்லை.. அமித்ஷாவின் பேச்சுக்கு RJD எம்.பி. மனோஜ் ஜா கண்டனம்

Published On 2024-12-18 11:50 GMT   |   Update On 2024-12-18 12:31 GMT
  • அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்
  • எங்களுக்கு வானுலக சொர்க்கம் தேவையில்லை. இந்த நிலம் சொர்க்கமாக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பு மீதான விவாதம் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது பேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள். அமித் ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஷ்டிரிய ஜனதா தள மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா, "அமித் ஷாவின் பேச்சு அருவருப்பாக இருந்தது. எங்களுக்கு வானுலக சொர்க்கம் தேவையில்லை. இந்த நிலம் சொர்க்கமாக்கப்பட வேண்டும், அதுதான் அம்பேத்கரின் விருப்பமும் கூட. அவர் மனதில் இருப்பது வாய் தவறி வெளியே வந்துவிட்டது. இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News