இந்தியா

நான் பேசியதை AI மூலம் காங்கிரஸ் திரித்து வெளியிட்டது: அமித் ஷா விளக்கம்

Published On 2024-12-18 12:33 GMT   |   Update On 2024-12-18 12:38 GMT
  • நேரு அம்பேத்கரை வெறுத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
  • காங்கிரஸ் ஆட்சியை இழந்த பின்னர்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மாநிலங்களவையில் பேசும்போது அம்பேத்கரை உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்தாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது பேச்சு திரித்து கூறுவதாக காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டினார்.

அமித் ஷா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:-

* அம்பேத்கரை காங்கிரஸ் கவுரவிக்கவில்லை.

* நேரு அம்பேத்கரை வெறுத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

* அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது.

* காங்கிரஸ் ஆட்சியை இழந்த பின்னர்தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

* எனது பேச்சில் ஒரு பகுதியை மட்டும் வைத்து அனைவரும் குறை கூறுகின்றனர்.

* உண்மைகளை திரித்து கூறுவதே காங்கிரசாரின் வேலை.

* காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு எதிரானது, இடஒதுக்கீட்டிற்கு எதிரானது, அரசியலமைப்புக்கு எதிரானது என்பதை பாஜக பேச்சாளர்கள் நாடாளுமன்றத்தில் நிரூபித்தனர்.

* நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது.

* பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது.

* அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது.

* என்னுடைய ராஜினாமா காங்கிரஸ் கட்சியின் எந்த பிரச்சனையையும் தீர்க்கப்போவது இல்லை.

Tags:    

Similar News