இந்தியா

மல்லையா, நீரவ் மோடியின் சொத்துகளை விற்பனை செய்து வங்கிகளுக்கு ரூ.15,184 கோடி அளிப்பு: நிர்மலா சீதாராமன்

Published On 2024-12-18 10:11 GMT   |   Update On 2024-12-18 10:11 GMT
  • விஜய் மல்லையா சொத்துகளை விற்பனை செய்து 14,131.6 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டது.
  • நீரவ் மோடியின் சொத்துகளை விற்பனை செய்து 1052.58 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டது.

தொழில் அதிபரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றிருந்தார். வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பி கட்ட முடியாத நிலையில், வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். அதேபோல் வைர வியாபாரியான நீரவ் மோடியும் வங்கிகளில் கடன் பெற்று, பின்னர் கட்ட முடியாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.

இதுபோன்று பல தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடன்களை திரும்பப் பெற முடியாமல் உள்ளள. இந்த நிலையில் நேற்று மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமலாக்கத்துறை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு முறைகேடு செய்தவர்களின் சொத்துகளை விற்பனை செய்து 22,280 கோடி ரூபாயை வங்கிகளுக்கு அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையா சொத்துகளை விற்பனை செய்து 14,131.6 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டது.

அதேபோல் நீரவ் மோடியின் சொத்துகளை விற்பனை செய்து 1052.58 கோடி ரூபாய் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு அளிக்கப்பட்டது.

தேசிய ஸ்பாட் எக்சேஞ்ச் லிமிடெட் முறைகேட்டில் 17.47 கோடி ரூபாய் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.எஸ். குரூப் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விற்பனை செய்து 20.15 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

ரோஸ்வேலி குரூப் (Rose Valley Group) 19.40 கோடி ரூபாய்

சூர்யா பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்- 185.13 கோடி ரூபாய்

நவேரா சேக் மற்றும் மற்றவர்களின் மதிப்புகள் (ஹீரா குரூப்) - 226 கோடி ரூபாய்

மெகுல் சோக்சி மற்றும் மற்றவர்களிடம் இருந்து - 2,565.90 கோடி ரூபாய்

நாயுடு அம்ருதேஷ் ரெட்டி மற்றும் மற்ற மதிப்புகள்- 12.73 கோடி ரூபாய்

வங்கிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார குற்றங்களைச் செய்த எவரையும் தனது அரசாங்கம் விட்டுவைக்கவில்லை.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News